Type Here to Get Search Results !

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீயில் வீடு எரிந்து சேதமான மூதாட்டிக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கிய மாவட்ட ஆட்சியர்.


தர்மபுரி மாரட்டம் காரிமங்கலம் பகுதியில் உள்ள அருணேஸ்வரர் கோயில் தெருவில் வசித்துவரும் காளியம்மாள் (60) கூலி தொழிலாளி, இவருக்கு சொந்தமான ஓட்டு வீடு கடந்த 24ம் தேதி விடியற் காலை சுமார் 5.00 மணிக்கு எதிர்பாராத விதமாக தீப்பற்றியது. 

இதையறிந்த காளியம்மாள் கூச்சலிட்டார், இவரது அலறல்  சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தை சேர்ந்த ஊர் பொதுமக்கள் ஒன்றினைந்து தீயை அணைத்தனர். இருப்பினும் வீடு முற்றிலும் எரிந்து சேதமானது. இதையறிந்த மாவட்ட ஆட்சியர் சாந்தி மூதாட்டியை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்க்கு இன்று வரவழைத்து இலவச வீட்டுமனை பட்டாவினை வழங்கினார். உடன் காரிமங்கலம் தாசில்தார் ரமேஷ்  மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies