Type Here to Get Search Results !

பஞ்சப்பள்ளியில் கனவன் கடன் வாங்கியதை மனைவி தட்டி கேட்டதால் விவசாயி மாயம்.


தர்மபுரி மாவட்டம்  பஞ்சப்பள்ளியில் வசித்து வருபவர் அம்பிகா (வயது.36) இவர் நமாண்டஅள்ளி போஸ்ட் ஆபசில் வேலை செய்து வருகிறார். இவரது கனவர் ராஜாராம் விவசாயி (வயது.46) இவர் விவசாயம் செய்ய வேண்டி மனைவிக்கு தெரியாமல் 10 இலட்சம் ரூபாய் தனியார் வங்கியில் கடன் வாங்கி உள்ளார்.

இதையறிந்த மனைவி அம்பிகாவிற்க்கும் ராஜாராமிற்க்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 17ம் தேதி மீன்டும் கனவன் - மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. மனைவி வேலைக்கு சென்று விட்டு மீண்டும் மாலை வீட்டிற்க்கு வந்து பார்த்த போது கனவனை காணவில்லை எங்கு தேடியும் கனவர் கிடைக்காததால், கனவரை கண்டுபிடித்து தர கோரி இன்று பஞ்சப்பள்ளி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் பஞ்சப்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான வரை தேடி வருகின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies