Type Here to Get Search Results !

தருமபுரி கிழக்கு திமுக மாணவர் அணி சார்பாக ஆட்டோ ஓட்டுநர் நலச் சங்கத்திற்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.


தர்மபுரி அடுத்த இண்டூர் பேருந்து நிலையம் அருகில் கழக இளைஞரணி செயலாளர் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளையொட்டி ஆட்டோ ஓட்டுநர்கள் நலச் சங்கத்திற்கு நல திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

திமுக மாணவரணி மாவட்ட அமைப்பாளர் என்.பி. பெரியண்ணன் தலைமையில் நடைபெற்ற விழாவில் கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு 100 ஆட்டோ ஓட்டுனர்களுக்கு அரிசி, பருப்பு, என்னை, மைதா என குடும்பத்துக்கு தேவையான மளிகை பொருட்கள் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை கொண்டாடும் வகையில் வழங்கப்பட்டது. முன்னதாக பொதுமக்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. 


இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் தங்கமணி, மாநில வர்த்தக அணி துணைத் தலைவர் தர்மசெல்வன், மாவட்ட துணை செயலாளர் ரேணுகாதேவி, இண்டூர் ஒன்றிய செயலாளர் வைகுந்தம், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் அசோக் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies