Type Here to Get Search Results !

பாலக்கோடு அருகே காட்டுமாரியம்மன் கோவில் நெடுஞ்சாலையில் அபாயகரமான பாறை மற்றும் கொண்டை ஊசி வளைவுகளால், தொடர் விபத்து - மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை


தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே தேங்கல்மேடு, காட்டு மாரியம்மன் கோவில் நெடுஞ்சாலை பகுதியில் சாலை ஒட்டி உள்ள பாறை மற்றும் அபாயகரமான கொண்டை ஊசி வலைவுகளால் அடிக்கடி தொடர்ந்து விபத்து ஏற்பட்டு வருகிறது. 


மேலும் பெல்ரம்பட்டி கூட்டுரோடு முதல் எருதுகூடஹள்ளி பஸ்நிறுத்தம் வரை நெடுஞ்சாலை பகுதிகளில் அதிக அளவில் அபாயகரமான கொண்டை ஊசி வளைவு பகுதிகள் உள்ளதால் எதிரே வரும் வாகனங்கள் சரியாக தெரியாத நிலையிலும் சாலையோரம் பாறைகள், மற்றும் முட்புதர்கள் எப்போதும் காணப்படுவதால் விபத்துக்கள் ஏற்பட்டு தொடர் உயிர் இழப்புகள் ஏற்பட்டு வருகிறது. 

எனவே மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை மேற்கொண்டு இந்த அபாயகரமான வளைவு பகுதிகளை கண்டறிந்து ஆய்வு செய்து சாலையை விரிவாக்கம் செய்து சீரமைக்க வேண்டும் என இப்பகுதி கிராம பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies