Type Here to Get Search Results !

பாலக்கோடு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கவுன்சிலர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடந்தது.


தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் ஆலோசனைக் கூட்டம், ஒன்றிய குழு தலைவர்  பாஞ்சாலை  கோபால் தலைமையில் இன்று நடைபெற்றது.

 

கூட்டத்திற்க்கு வட்டார வளர்ச்சி அலுவலர் சுருளிநாதன்  முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற வரவு செலவு கணக்குகளை அதிகாரிகள் எடுத்துரைத்தனர், இந்த கூட்டத்தில் மருத்துவத் துறை சார்பில்  மழைக்காலங்களில் பரவும் வைரஸ் நோய்கள், டெங்கு, மலேரியா மற்றும் கொசு ஒழிப்பு  குறித்து ஆலோசிக்கப்பட்டது.

 

மழை காலம் என்பதால் ஒவ்வொரு ஊராட்சி பகுதிகளிலும் பனை விதைகள், மரக்கன்றுகளை நடுதல் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் துணைச் சேர்மன் பிரபாகரன், ஒன்றிய கவுன்சிலர்கள் அழகுசிங்கம், முத்துசாமி, ஜோதி, லதா ராஜாமணி, நஞ்சுண்டன், முத்தப்பன் சரண்யா, உள்ளிட்ட கவுன்சிலர்கள் கலந்துகொண்டனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies