Type Here to Get Search Results !

தருமபுரி குப்பாகவுண்டர் தெரு 7-வது வார்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா.


தருமபுரி கிழக்கு மாவட்டம் சார்பில் குப்பாகவுண்டர் தெரு 7-வது வார்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா 100 பெண்களுக்கு புடவை வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது.


தருமபுரி குப்பா கவுண்டர் தெரு 7-வது வார்டு சார்பாக கழக இளைஞரணி செயலாளர் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளையொட்டி பெரியார் சிலை அருகில் மாவட்ட அமைப்பாளர் மகளிர் தொண்டர் அணி செயலாளர் பத்மா தலைமையில் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக நகர மன்ற தலைவர் லட்சுமி நாட்டான் மாது கலந்துகொண்டு 100 பெண்களுக்கு இலவச புடவையை வழங்கினார். அதனைத் தொடர்ந்து கேக்கும் வெஜிடபிள் சாதமும் அன்னதானமாக பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. 


இந்த நிகழ்ச்சியில் ரேணுகாதேவி தங்கமணி முல்லைவேந்தன் காசி மற்றும் 7-வது வார்டு இளைஞரணி செயலாளர் சபரி பாண்டியன், 7-வது வார்டு துணைச் செயலாளர்கள் லோகேஷ், பிர்தோஷ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies