Type Here to Get Search Results !

மூளை சாவு அடைந்து உடல் உறுப்புகளை தானம் செய்த இளைஞரின் உடலுக்கு மாவட்ட ஆட்சியர் இறுதி மரியாதை செலுத்தினார்.


மூளை சாவு அடைந்து உடல் உறுப்புகளை  தானம் செய்த இளைஞரின் உடலுக்கு அரசு மருத்துவ மனையில் மாவட்ட ஆட்சியர் சாந்தி, மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள் செவிலியர்கள் உறவினர்கள் மலர் தூவி அஞ்சலி செய்து மரியாதை செலுத்தினர்.



தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த எர்ரசீகலஅள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் காளியப்பன் மகன் கவியரசு.  23 வயதான இவர் கடந்த 24ஆம் தேதி அதியமான் கோட்டை அருகே இருசக்கர வாகனத்தில் சென்றபோது விபத்தில் படுகாயம் அடைந்து மூளைச்சாவடைந்து பின்பு இவரது உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டது. 


இதனையடுத்து இன்று காலை கவியரசுவின் உடலுக்கு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் சாந்தி மற்றும் மருத்துவர்கள், மருத்துவ கல்லூரி மாணவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள், உறவினர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள். பின்பு கவியரசு உடல் அவரது சொந்த ஊரான எர்ரசீகலஹள்ளி கிராமத்தில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்  செய்யப்பட உள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies