Type Here to Get Search Results !

பி.மோட்டுப்பட்டி கிராமத்தில் மொபட் மீது தனியார் பஸ் மோதிய விபத்தில் லாரி டிரைவர் படுகாயம்.


தர்மபுரி மாவட்டம் குமாரசாமிபேட்டை பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் சரவணன் (வயது 56) இவர் கடந்த  23ம் தேதி  தனது மருமகன் சுரேஷின் வீடு திறப்பு விழா நிகழ்ச்சிக்கு செல்ல  தனது மொபட்டில் திப்பம்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தார்.

பி.மோட்டுப்பட்டி அருகே சென்று கொண்டிருந்த போது சாலையின் குறுக்கே பாம்பு வந்ததால் செய்வதறியாது மொபட்டை சாலையில் நிறுத்தினார். அப்போது திருப்பத்தூரில் இருந்து தர்மபுரி நோக்கி எதிரே  வந்த தனியார் பேருந்து மொபட் மீது மோதியது, இதில் சரவணன் படுகாயமடைந்தார்.


அக்கம் பக்கத்தினர் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து  சரவணன் இன்று கிருஷ்னாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் கிருஷ்ணாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies