Type Here to Get Search Results !

கோவை ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் கொள்ளை அடித்த கம்பைநல்லூர் கொள்ளையனை சுற்றி வளைத்த போலீசார்.


கோவை ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் கொள்ளை அடித்த தருமபுரியை சார்ந்த கொள்ளையனை சுற்றி வளைத்த போலீசார். வீட்டின் மேற்கூறையை பிரித்து தப்பி ஓடியதாக தகவல். கொள்ளை வழக்கில் புதிய திருப்பமாக,  கொள்ளையடித்த நபர் தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லூர் அருகே உள்ள தேவரெட்டியூரை  சேர்ந்த விஜயகுமார் என தெரியவந்துள்ளது.


அங்கு சென்ற தனிப்படையினர் விஜயகுமார் வீட்டில் பதுக்கி வைத்திருந்த நகைகளை பறிமுதல் செய்தனர். விஜயகுமார் தனது மனைவி ஊரான ஆணை மலையில் தங்கி இருந்தது தெரியவந்தது. அங்கு சென்ற காவல்துறையினர், வீட்டை சுற்றி வளைத்து கைது செய்ய முயன்றனர்.


வீட்டின் மேற்கூறயை பிரித்து கொள்ளையன் விஜயகுமார் தப்பியதாக கூறப்படுகிறது. ஆனைமலை வீட்டில் இருந்தும் சில சவரன் நகைகள் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறை தகவல் மீட்கப்பட்ட நகைகள் மதிப்பு இதுவரை தெரியவில்லை.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies