Type Here to Get Search Results !

வெள்ளிசந்தை தனியார் மண்டபத்தில் நாடாளுமன்ற தேர்தல் குறித்து அமமுக செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைப்பெற்றது.


தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த, வெள்ளிசந்தை தனியார் மண்டபத்தில் அமமுக செயல்வீரர்கள், வீரங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் ஒன்றிய செயலாளர் கணேசன் தலைமையில் இன்று நடைப்பெற்றது.


இக்கூட்டத்திற்கு முன்னாள் அரூர் சட்டமன்ற உறுப்பிணர் முருகன், தொகுதி பொறுப்பாளர் ஏகநாதன் ஒன்றிய செயலாளர்கள் மாதேஷ், நகர செயலாளர்கள் ஞானம், இளங்கோ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக மாவட்ட செயலாளர் டி.கே.ராஜேந்திரன் கலந்து கொண்டு பேசியதாவது, வரும் நாடாளுமன்ற தேர்தலில் தொண்டர்கள் உத்வேகத்துடன் கட்சி பணியாற்ற வேண்டும், பூத் கமிட்டி நிர்வாகிகள் தங்கள் பகுதிகளில் 18 வயது நிரம்பியவர்களை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க முனைப்பு காட்ட வேண்டும், கட்சி தலைமை யாரை வேட்பாளராக நியமித்தாலும் அவர்கள்  வெற்றி பெற பாடுபட வேண்டும், வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து கட்சியின் கொள்கைகளை எடுத்து கூறி அவர்களின் ஆதரவை பெற வேண்டும் என பேசினார்.


இக்கூட்டத்திற்க்கு பொதுக்குழு உறுப்பிணர் கவியரசு, சிறுபான்மை நல பிரிவு மாவட்ட செயலாளர் மசியுல்லா, விவசாய பிரிவு மாவட்ட செயலாளர் சண்முகம், மற்றும் மாவட்ட, ஒன்றிய, கிளை கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் கட்சி தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies