Type Here to Get Search Results !

பாப்பாரப்பட்டி அருகே புதுக்கரம்பு கிராமத்தில் கர்ப்பிணி மாயம்!


தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த பாப்பாரப்பட்டி அருகே உள்ள புதுகரம்பு கிராமத்தைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மகன் வினித் குமார் வயது 23. கூலித் தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகி மனைவி கீர்த்திகா(20) வுடன்  நாமக்கல்லில் தங்கி இருந்து கூலி வேலை செய்து வருகிறார். கீர்த்திகா மூன்று மாதம் கர்ப்பமாக உள்ளார். 


இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கீர்த்திகா புதுகரம்பில் உள்ள தனது தாயார் வீட்டுக்கு வந்து அங்கு தங்கி இருந்தார். கடந்த 22 ஆம் தேதி தனது தாயார் வீட்டில் இருந்து நாமக்கல்லில் உள்ள தனது கணவர் வினித் குமாரிடம் செல்வதாக கூறிவிட்டு வீட்டிலிருந்து கிளம்பியவர் காணவில்லை. 


தனது மனைவி காணாமல் போனது குறித்து வினித் குமார் பாப்பாரப்பட்டி போலீசில் புகார் கொடுத்துள்ளார். இது தொடர்பாக பாப்பாரப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies