Type Here to Get Search Results !

பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த ஒருவருக்கு வழங்கப்படும் அவ்வையார் விருது பெற தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. - மாவட்ட ஆட்சியர் தகவல்


பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த ஒருவருக்கு 2023-24ம் ஆண்டிற்கான அவ்வையார் விருது 08.,03.2024 உலக மகளிர் தின விழாவில் தமிழக முதலமைச்சர் அவர்களால் வழங்கப்பட உள்ளது. இவ்விருதுக்கு ரொக்கப்பரிசு, தங்கப்பதக்கம், சான்று மற்றும் சால்வை வழங்கப்படும். மேற்படி விருதுக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


2024-ம் ஆண்டு அவ்வையார் விருது வழங்கும் பொருட்டு கருத்துருக்கள் அனுப்புவதற்கான விதிமுறைகள்:

  1. தமிழ்நாட்டை பிறப்பிடமாக கொண்டவராகவும், 18 வயதிற்கு மேற்ப்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்.
  2. சமூக நலனை சார்ந்த நடவடிக்கைகள், பெண் குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையிலான நடவடிக்கை, மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிர்வாகம் போன்ற துறைகளில் மேன்மையாக பணிபுரிந்து மக்களுக்கு தொண்டாற்றும் வகையில் தொடர்ந்து பணியாற்றுபவராக இருத்தல் வேண்டும். 
  3. இவ்விருது குறித்த விவரங்கள் அனைத்தும் தமிழக அரசின் விருதுகள் இணையதளத்தில் (https://award.tn.gov.in) 01.11.2023 முதல் வெளியிடப்பட்டுள்ளது, இவ்விருதுக்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 10.12.2023 இணையதளம் மூலம் விண்ணப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். 
  4. இணையதளத்தில் பதிவு செய்த பிறகு அனைத்து ஆவண்ங்களையும், தருமபுரி மாவட்ட சமூக நல அலுவலகத்திற்கு கையேடாக (Booklet) தயார் செய்து தமிழ் (ம) ஆங்கிலத்தில அச்சு செய்யப்பட்டு தலா 2 நகல்கள் அனுப்பிட வேண்டும்.

கருத்துக்கள மாவட்ட சமூக நல அலுவலகம், கூடுதல் கட்ட்டம், மாவட்ட ஆட்சியர் வளாகம், தருமபுரி மாவட்டம் என்ற முகவரியில் சமர்ப்பிக்கலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies