Type Here to Get Search Results !

பாலக்கோடு குத்தலஅள்ளி முருகன் கோயில் அருகில் கடன் கட்ட முடியாததால் விவசாயி விஷம் குடித்து தற்கொலை.


தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த குத்தலஅள்ளி கிராமத்தை சேர்ந்த முதியவர் ராஜப்பன் (வயது.63) இவர் கடந்த 5 வருடங்களுக்கு முன்னர் நெல் அறுவடை எந்திரம் வாங்க பாலக்கோட்டில் உள்ள ஸ்ரீராம் நிதி நிறுவனத்தில் நிலத்தை அடமானம் வைத்து 13 இலட்சம் ரூபாய் கடன் வாங்கி இருந்தார்.

கடந்த சில மாதங்களாக நெல் அறுவடை எந்திரம் ஓடாததால் போதிய வருமானம் இன்றி கடன் தொகையை செலுத்த முடியாமல் விரக்தியில் இருந்து வந்தார். இன்று கடன் செலுத்தாவிட்டால் மானம் போய் விடும் என்று அஞ்சிய முதியவர் ஊருக்கு வெளியே உள்ள முருகன் கோவில் அருகே விஷம் குடித்து இறந்து கிடந்தார்.


அவ்வழியாக சென்றவர்கள் இது குறித்து பாலக்கோடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்க்கு வந்த பாலக்கோடு போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies