Type Here to Get Search Results !

பாலக்கோடு அடுத்த எலுமிச்சனஅள்ளி தென்னந்தோப்பில் புகுந்த 15 அடி நீள பாம்பு, வனத்துறையினர் உயிருடன் பிடித்து காப்பு காட்டில் விட்டனர்.


தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த எலுமிச்சனஅள்ளி கிராமத்தை சேர்ந்த சீத்தாம்மாள் இவரது தென்னந்தோப்பில் நேற்று மாலை 15 அடி நீள மலைப்பாம்பு ஒன்று  ஊர்ந்து சென்றது, இதனை கண்ட சீத்தாம்மாள் அதிர்ச்சி அடைந்து பாலக்கோடு வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார்.

உடனடியாக வந்த வனத் துறையினர் மலைப்பாம்பை லாவகமாக உயிருடன் பிடித்து பிக்கனஅள்ளி காப்பு காட்டில் விட்டனர். மலைப்பாம்பு தென்னந்தோப்பில் புகுந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies