Type Here to Get Search Results !

காடுசெட்டிபட்டியில் அதிமுகவில் இருந்து விலகி 30க்கும் மேற்பட்டோர் மாவட்டச் செயலாளர் பழனியப்பன் தலைமையில் திமுகவில் இணைந்தனர்.


தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் மேற்கு ஒன்றியம்  கும்மனூர் ஊராட்சி காடுசெட்டிபட்டி கிராமத்தில் 30க்கும் மேற்பட்டோர் திமுகவில் இனையும் நிகழ்ச்சி நடைபெற்றது. கும்மனுர் கிராமத்தை சேர்ந்த அதிமுகவினர்  சீனிவாசன், முனிராசு, மகேஷ், முத்தன், ஆனந்தி, பவித்ரா, கோவிந்தராஜ் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்டோர் அதிமுகவிலிருந்து விலகி திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் பி.கே.  அன்பழகன் முன்னிலையில், தருமபுரி மேற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் முனைவர் பழனியப்பன் தலைமையில் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் அதிமுக மாநில விவசாய அணி துணை செயலாளர் சூடப்பட்டி சுப்பிரமணி, மாவட்ட துணைச் செயலாளர் வழக்கறிஞர் ஆமணி, காரிமங்கலம் மேற்கு ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் கோபால், மாரண்டஅள்ளி பேரூர் கழக செயலாளர் பேரூராட்சி தலைவர் வெங்கடேசன், மாவட்ட பிரதிநிதி முத்துராஜ், ஜெகநாதன், வெங்கடாசலபதி, மாவட்ட வர்த்தக அணி து.அமைப்பாளர் அர்ஜுனன், மாவட்ட மீனவர் அணி அமைப்பாளர் அருள் பிரகாஷ், மாவட்ட தொண்டரணி விசி குமார், சாமனூர் மணிவண்ணன், விவசாய அணி  அமைப்பாளர் குமரவேல், து.அமைப்பாளர், சிவகுமார், தர்மன், ஓட்டுனர் அணி முகுந்தன், ஒன்றிய கவுன்சிலர் நாகராஜ், ராஜா. ஊராட்சி மன்ற தலைவர்கள் துரை, சுரேஷ், துணைத் தலைவர் சென்னா மூர்த்தி, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் அரசு, துணை அமைப்பாளர்கள் இராமமூர்த்தி, மாதேஷ், கிளைச் செயலாளர் முருகன், வாக்குச்சாவடி முகவர் அர்ஜுனன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies