Type Here to Get Search Results !

பாலக்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேசிய சப்-ஜூனியர் ஹாக்கி போட்டிக்கு தேர்வு பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா.


பாலக்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேசிய சப்-ஜூனியர்  ஹாக்கி போட்டிக்கு தேர்வு பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைப்பெற்றது, இந்திய பள்ளிகள் விளையாட்டு குழுமம் நடத்தும் 67-வது தேசிய சப்-ஜூனியர் ஹாக்கி போட்டி மத்திய பிரதேசம் குவாலியரில் வரும் டிசம்பர் மாதம் நடைபெற உள்ளது. 


இதற்கான வீரர்களை தேர்வு செய்யும் போட்டி   சிவகங்கையில் உள்ள  மாவட்ட விளையாட்டு திடலில் நேற்று முன்தினம் நடைபெற்றது, இதில் சென்னை, கன்னியாகுமரி, சேலம், கோவை, மதுரை, வேலூர், கடலூர் ஆகிய  8 மண்டலங்களை சேர்ந்த 88 வீரர்கள் கலந்து கொண்டனர்.


இதில் தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் 8 ஆம் வகுப்பு மாணவன் கனிஷ் 9ம் வகுப்பு மாணவன் பாலகிருஷ்ணன் ஆகியோர் சிறப்பாக விளையாடி தேர்வு பெற்றுள்ளனர். தமிழக அணிக்கு தேர்வு செய்யப்பட்ட மாணவர்களை கெளரவிக்கும் வகையில் பள்ளியில் மாணவர்களை பாராட்டும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.


இந்நிகழ்ச்சியில் முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன், மாவட்ட கல்வி அலுவலர் விஜயகுமார் பள்ளியின் தலைமை ஆசிரியர் லட்சுமணன், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் முத்துகுமார், உடற்கல்வி ஆசிரியர்கள் ரங்கநாதன், அறிவழகன், இளையராஜா, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர்கள் ஜீவாகிருஷ்ணன், கே.வி.ரங்கநாதன். இருபால் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு மாணவர்களை  பாராட்டினார்கள்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies