Type Here to Get Search Results !

காரிமங்கலம் அருகேயுள்ள அகரம் சாலை ஓரம் கேட்பாரற்று கிடந்த சொகுசு காரில் 3 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள 500 கிலோ குட்கா பறிமுதல்.


தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் வழியாக கர்நாடகா, ஆந்திர உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து சேலம் கோவை உள்ளிட்ட பகுதிகளுக்கு தடை செய்யபட்ட குட்கா பொருட்கள் கடத்தி செல்வதும் போலீசார் அதை கண்டறிந்து பிடிக்கும் சம்பவம் அடிக்கடி நடைபெற்று வரும் நிலையில், நேற்று அகரம் பிரிவு சாலை ஓரம் நீண்ட நேரம் சொகுசு கார் ஒன்று நின்று கொண்டிருப்பதாக காரிமங்கலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது, சம்பவ இடத்திற்க்கு விரைந்து சென்ற போலீசார் சொகுசு கார் கேட்பாரற்று இருப்பதை கண்டு சந்தேகமடைந்து காரை திறந்து சோதனை மேற்கொண்டனர்.

அதில் 500 கிலோ அளவிலான  ஹான்ஸ் , குட்கா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்கள் இருந்ததை கண்டறிந்தனர். உடனடியாக சொகுசு காருடன் கடத்தப்பட்ட பொருட்களை பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு வந்தனர். மேலும் இது குறித்து காரிமங்கலம் போலீசார்  வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies