Type Here to Get Search Results !

மாவட்ட ஆட்சியர் செய்தி

கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட உரிமைத்தொகைக்கான சந்தேகங்கள் மற்றும் தகவல்களை அறிய தொடர்பு எண்கள் அறிவிப்பு.


தருமபுரி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் தொடர்பான கோரிக்கைகளை பொதுமக்கள் தெரிவிக்க 32 தகவல் மையங்கள் அமைக்கப்பட்டு, தற்பொழுது வரை வரப்பெற்ற 3,682 கோரிக்கைகளுக்கு உரிய விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டத்தில் 8,848 நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் இதுநாள்வரை மேல்முறையீடு செய்துள்ளனர். மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தகவல்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தெரிவித்துள்ளதாவது: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளில் கடந்த 15.09.2023 அன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில், 1 கோடியே 6 இலட்சத்து 50 ஆயிரம் மகளிர் பயன்பெறும் வகையில், மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000/- வழங்கிடும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை தொடங்கி வைத்ததை தொடர்ந்து, தருமபுரி மாவட்டத்தில் மாண்புமிகு வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் அவர்கள் மற்றும் மாண்புமிகு இளைஞர்நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மற்றும் அரசு திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் அவர்கள் ஆகியோரால் இதுநாள் வரை 2500 கலைஞர் மகளிர் திட்ட பயனாளிகளுக்கு வங்கி பற்று அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது.


தருமபுரி மாவட்டத்தில் மொத்தம் 1,048 நியாய விலைக்கடைகளில் 4,68,602 குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெற்று வருகின்றனர். இவர்களில் கலைஞர் மகளிர் திட்டத்திற்கென 3,92,354 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. பெறப்பட்ட விண்ணப்பதாரர்களில் தகுதிய வாய்ந்த குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000/- அவர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. மேலும், 18.09.2023 முதல் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதற்கான காரணம் குறிப்பிடப்பட்டு விண்ணப்பதாரரின் கைப்பேசி எண்ணிற்கு குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டு வருகிறது.


உரிமைத்தொகைக்கான விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட மனுதாரர்கள் அவர்களுக்கான சந்தேகங்கள் மற்றும் தகவல்களை அறிந்துகொள்ளும் வகையில் தருமபுரி மாவட்டத்தில் 32 தகவல் மையங்கள் (Help Desk) அமைக்கப்பட்டு, தற்பொழுது வரை வரப்பெற்ற 3,682 கோரிக்கைகளுக்கு உரிய விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.


இத்திட்டத்தில் விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்ட மனுதாரர்கள் மேல்முறையீடு செய்ய விரும்பினால் சம்பந்தப்பட்ட வருவாய் கோட்டாட்சியருக்கு விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதற்கான குறுந்தகவல் கிடைக்கபெற்ற 30 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்ய தங்கள் பகுதிக்கு அருகாமையில் உள்ள இ-சேவை மையத்தின் மூலம் எவ்வித கட்டணமுமின்றி மேல்முறையீட்டு மனுவை இணையவழி மூலம் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும். 


தருமபுரி மாவட்டத்தில் இதுநாள் வரை 8,848 மேல்முறையீடு கோரிக்கை மனுக்கள் வரப்பெற்றுள்ளன. கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட உரிமைத்தொகைக்கான விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட மனுதாரர்கள் அவர்களுக்கான சந்தேகங்கள் மற்றும் தகவல்களை அறிந்துகொள்ளும் வகையில் 

  1. தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தகவல் மையத்தினை 04342 – 230067, 04342 – 231500, 04342 – 231077, 1077 ஆகிய தொலைபேசி எண்களிலும், 
  2. தருமபுரி வருவாய் கோட்ட அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தகவல் மையத்தினை 7904002458 என்ற தொலைபேசி எண்ணிலும், 
  3. அரூர் வருவாய் கோட்ட அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தகவல் மையத்தினை 7904002458 என்ற தொலைபேசி எண்ணிலும், மேலும் 
  4. தருமபுரி வட்டாட்சியர் அலுவலகம் - 04342 – 260927
  5. அரூர் வட்டாட்சியர் அலுவலகம் - 04346 – 296565
  6. காரிமங்கலம் வட்டாட்சியர் அலுவலகம் - 9043205956
  7. நல்லம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகம் - 04342 – 294939
  8. பாலக்கோடு வட்டாட்சியர் அலுவலகம் - 04348 – 222045
  9. பாப்பிரெட்டிப்பட்டி வட்டாட்சியர் அலுவலகம் - 04346 – 246544
  10. பென்னாகரம் வட்டாட்சியர் அலுவலகம் - 04342 - 255636 
உள்ளிட்ட தகவல் மைய தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு தகவல்களை பெற்று, பயனடையலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தெரிவித்துள்ளார். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies