Type Here to Get Search Results !

மாவட்ட ஆட்சியர் செய்தி

தருமபுரி மாவட்டத்தில் 29.09.2023 முதல் 12.10.2023 வரை மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு பணி நடைபெற உள்ளது.- மாவட்ட ஆட்சியர் தகவல்.

மாதிரி படம்.

தமிழ்நாடு அரசு நடத்தும் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு 2023 –ல் தருமபுரி மாவட்டத்திலுள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளும் பங்கு பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தகவல் இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தெரிவித்துள்ளதாவது, தமிழ்நாடு உரிமைகள் திட்டம் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையால் மாற்றுத்திறனாளிகளுக்காக பிரத்தியேகமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. 

இத்திட்டத்தின் ஒரு நடவடிக்கையாக அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகளையும் கணக்கெடுப்பு மேற்கொண்டு சமூகத் தரவு தளத்தை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டத்தில் 29.09.2023 முதல் 12.10.2023 வரை இக்கணக்கெடுப்பு பணி நடைபெற உள்ளது. மகளிர் திட்ட மேம்பாட்டு நிறுவனத்தின் களப்பணியாளர்கள் கணக்கெடுக்கும் பணிக்காக உங்கள் இல்லம் தேடி வருவார்கள் கணக்கெடுக்கும் பணிக்கு தேவைப்படும் தகவல்களை தயக்கமின்றி வழங்கி ஒத்துழைப்பு வழங்குமாறும், கணக்கெடுப்பில் கலந்துக்கொள்வதின் மூலம் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சமூக தரவுப் பதிவுகளில் இடம் பெற மாற்றுத்திறனாளிகளுக்கு இது ஒரு அரிய வாய்ப்பு, உங்களுக்குத் தெரிந்த மாற்றுத்திறனாளிகளுக்கு இந்த தகவலை பகிர்ந்து உதவிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.


மேலும் விவரங்கள் தேவையிருப்பின் மாவட்ட ஆட்சியர் அலுவக வளாகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் தொலைபேசி எண்களில் 04342-230050, 9786264979 மற்றும் 9962883837 ல் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. தருமபுரி மாவட்டத்திலுள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளும் இக்கணக்கெடுப்பில் பங்கு பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது, என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies