Type Here to Get Search Results !

தருமபுரி கோட்டை மல்லிகார்ஜூசாமி மற்றும் பரவாசுதேவ பெருமாள் கோவிலில் சாமி தரிசனம் செய்தார் ஜி.கே.மணி.


பாட்டாளி மக்கள் கட்சி கெளரவ தலைவரும், பென்னாகரம் எம் எல்.ஏ.வுமான ஜி.கே.மணிக்கு கடந்த மாதம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தொண்டை பகுதியில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சிகிச்சை மற்றும் ஓய்வுக்கு பின்னர் சென்னையில் இருந்து தர்மபுரியில் உள்ள வீட்டுக்கு திரும்பிய அவர் தர்மபுரி கோட்டை மல்லிகார்ஜூசாமி மற்றும் பரவாசுதேவ பெருமாள் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். 


பின்னர் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் அவர்களிடம் இருந்து தொலைபேசியில் வாழ்த்து பெற்றார். பின்னர் அவர் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் பேப்பரில் எழுதி காண்பித்தும், ஜாடையாகவும் பேசினார். இதை தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுக்கு அவர் அன்னதானம் வழங்கினார்.


இந்நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் செந்தில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வேலுசாமி, பா.ம.க. மாநில துணைத் தலைவர்கள் பாடி செல்வம், சாந்தமூர்த்தி, ஒன்றிய குழு தலைவர்கள் மகேஸ்வரி பெரியசாமி, கவிதா ராமகிருஷ்ணன், பாமக கிழக்கு மாவட்ட செயலாளர் அரசாங்கம்,  மாவட்ட தலைவர்கள் செல்வகுமார், அல்லிமுத்து, மாவட்ட அமைப்பு செயலாளர் சண்முகம், பாட்டாளி இளைஞர் சங்க மாநில செயலாளர் முருகசாமி பாட்டாளி இளைஞர் சங்க மாவட்ட செயலாளர் சிவக்குமார், மாவட்டத்தலைவர் சத்தியமூர்த்தி, மாவட்ட கவுன்சிலர் மாது , சரவணன், ஒன்றிய கவுன்சிலர் சோனியா வெங்கடேசன் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியினை சார்ந்த தகடூர் தமிழன், நம்பிராஜன், வணங்காமுடி,   கார்த்திகேயன், மனோகரன், காமராஜ். சுதாமோகன், இமயவர்மன் மற்றும் ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies