Type Here to Get Search Results !

தருமபுரி மாவட்டத்தில் போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம் திறக்கப்பட்டது.

தருமபுரி மாவட்டத்தில் போக்சோ (பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் 2012) வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம் திறக்கப்பட்டது.



தருமபுரி மாவட்டம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் தடங்கத்தில் போக்சோ (பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் 2012) வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தினை தருமபுரி முதன்மை மாவட்ட நீதிபதி திரு.ஆ.மணிமொழி அவர்கள் இன்று (22.09.2023) திறந்து வைத்தார்கள்.


சமீப காலம் வரை, போக்ஸோ சட்டம் தொடர்பான வழக்குகள், பாலியல் துன்புறுத்துதல் தொடர்பான வழக்குகள், மகிளா நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்டு வந்தன. அதிக அளவு வழக்குகள் உள்ள போக்ஸோ சட்ட வழக்குகளை விசாரிக்க ஒரு சிறப்பு நீதிமன்றத்தை அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தின் பரிந்துரையின்பேரில் தமிழ்நாடு உத்தரவு பிறப்பித்தது. அதன் பெயரில் குழந்தைகளுக்கு எதிரான வழக்குகளை விரைந்து விசாரித்து அரசு முடிக்க இச்சிறப்பு நீதிமன்றம் துவங்கப்பட்டு இந்நீதிமன்றத்தின் நீதிபதியாக திரு. சையத் பாகத்துல்லா அவர்களை மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் நியமித்துள்ளது.


இந்நீதிமன்ற திறப்பு விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., காவல் கண்காணிப்பாளர் திரு.என்.ஸ்டீபன் ஜேசுபாதம், குடும்பநல நீதிபதி, மோட்டர் வாகன விபத்து தீர்ப்பாய சிறப்பு மாவட்ட நீதிபதி, தலைமை குற்றவியல் நடுவர் மற்றும் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள அனைத்து நீதிபதிகள், தருமபுரி வழக்கறிஞர்கள் சங்க தலைவர் திரு.R.சாந்திரசேகரன், செயலாளர் திரு.S.கோவிந்தராஜு மற்றும் மாவட்டத்திலுள்ள அனைத்து வழக்கறிஞர் சங்க தலைவர்கள், செயலாளர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies