Type Here to Get Search Results !

பாலக்கோட்டில் பறிமுதல் செய்யப்பட்ட 22 அடி விநாயகர் சிலை போலீசார் பாதுகாப்புடன் ஆற்றில் கரைப்பு.


தருமபுரி மாவட்டம் பாலக்கோடு மேல் தெருவை சேர்ந்த வேங்கை  இளைஞர்கள் நற்பணி மன்றம் சார்பில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 22 அடி உயரம் கொண்ட விநாயகர் சிலையை ஐதராபாத் இருந்து  கொண்டு வந்தனர்.

அனுமதிக்கப்பட்ட உயரத்தை மீறி சிலை எடுத்து வரப்பட்டதால் பாலக்கோடு போலீசார் சிலையை பறிமுதல் செய்து காவல்துறை வசம் பாதுகாப்புடன் வைத்திருந்தனர். கடைசி நாளான நேற்று  பறிமுதல் செய்யப்பட்ட விநாயகர் சிலையை  ஆற்றில்  கரைக்க முடிவு செய்யப்பட்டது.


விநாயகர் சிலையை வழிபாடு செய்ய வேண்டும் என்ற இளைஞர்களின் வேண்டுகோளை நிறைவேற்றும் விதமாக விநாயகர் சிலைக்கு அபிஷேகம் மற்றும் பூகைகள் செய்து நகரின் முக்கிய வீதி வழியாக ஊர்வலமாக சென்று போலீசாரின் பலத்த பாதுகாப்புடன் விநாயகர் சிலை சனத்குமார் ஆற்றில் கரைக்கப்பட்டது. 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies