Type Here to Get Search Results !

தொன்னையன அள்ளி கிராமத்தில் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் உண்டியல் வைக்க முற்பட்டதால் பொதுமக்கள் எதிர்ப்பு.

 

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த தொன்னையன அள்ளி கிராமத்தில் பழமை வாய்ந்த சென்னகேசவ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் காலங்காலமாக  கோவில்  அறக்கட்டளை மூலம் பொதுமக்களால்  நிர்வகிக்க பட்டு வருகிறது.


கோவிலுக்கு சொந்தமாக சுமார் 50 ஏக்கர் நிலங்கள் உள்ள நிலையில் திடீரென இன்று காலை கோவிலுக்கு வந்த இந்து அறநிலைய துறை அதிகாரிகள் இக்கோயில் அறநிலையத்துறை சொந்தமானது என்றும் இக்கோவிலில், நிர்வாகம் மற்றும் உண்டியல் வைத்து காணிக்கை வசூல் செய்யும் அதிகாரம் அறநிலையத்துறைக்கு மட்டுமே உள்ளதாக கூறி இந்து அறநிலை ஆய்வாளர் துரை கோவிலில் உண்டியல் வைக்க முற்பட்டார்.


இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கோவில் நிர்வாகிகள் காலம் காலமாக  கோவில்  அறக்கட்டளை  மூலம் நிர்வகிக்கப்பட்டு வரும் நிலையில் எதன் அடிப்படையில் இந்த கோவிலை அறநிலையத்துறை கையகப்படுத்தியது என  சரமாரியாக கேள்வி எழுப்பினர். 


மேலும் கோவில் வளர்ச்சிக்கு எந்த அக்கறையும் காட்டாமல்,  கோவிலுக்குள் உண்டியல் வைப்பது தொடர்பாக பொதுமக்கள் மற்றும் பக்தர்கள்  அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால்   பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த காரிமங்கலம் போலீசார் விரைந்து சென்று பொதுமக்கள் மற்றும் பக்தர்களை சமாதானம் செய்தனர்.


மேலும் இது குறித்து மாவட்ட நிர்வாகத்தின் ஆலோசனை பெற்று செயல்படும்படி அதிகாரிகளிடம் போலீசார் தெரிவித்ததால் அதிகாரிகள் திரும்பி சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும் பதட்டத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies