Type Here to Get Search Results !

பாலக்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி சுற்று சுவர் கட்டிடம் மழைக்கு இடிந்து விழுந்தது.


தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 6ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை சுமார் 2 ஆயிரம் மாணவர் பயின்று வருகின்றனர்.


இப்பள்ளியின் சுற்று சுவர் கட்டிடம் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டது. 500 அடி நீளமுள்ள சுற்று சுவர் கட்டிடமானது நாளடைவில் பலவீனமடைந்து விரிசல் ஏற்பட்டு ஆபத்தான நிலையில் காணப்பட்டது.


இந்நிலையில் நேற்றிரவு விடிய, விடிய பெய்த அடைமழையால் இன்று விடியற்காலை  சுற்று சுவர் கட்டிடத்தின் ஒரு பகுதி  சரிந்து கீழே விழுந்தது, மாணவர்கள் யாரும் இல்லாத நேரம் என்பதால் பெரும் அசம்பாவம் நிகழாமல் தவிர்க்கப்பட்டது.


சுற்று சுவர் இடிந்து விழுந்த சம்பவம்  மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில்  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies