Type Here to Get Search Results !

பாலக்கோடு தக்காளிமண்டி பின்புறம் பேரூராட்சிக்குட்பட்ட இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளை காலி செய்ய பேரூராட்சி நிர்வாகம் சார்பில் நீதிமன்ற அறிவிப்பு நோட்டீஸ்.


தருமபுரி மாவட்டம் பாலக்கோடு தக்காளிமண்டி பின்புறம் பேரூராட்சிக்குட்பட்ட இடத்தை கடந்த 20 ஆண்டுகளாக தனிநபர்கள்  சிலர் ஆக்கிரமித்து வீடு கட்டி வசித்து வருகின்றனர்.

ஆக்கிரமிப்பு இடத்தை மீட்க   பேரூராட்சி நிர்வாகம் முயற்சி செய்த போது ஆக்கிரமிப்பாளர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கின் தீர்ப்பில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடத்தை ஆக்கிரமிப்பாளர்கள் காலி செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற உத்தரவிட்டது.

 

அதனை தொடர்ந்து 15 நாட்களுக்குள் தாமதிக்காமல் வீட்டை காலி செய்து இடத்தை பேரூராட்சி வசம்  ஒப்படைக்க வேண்டும், தவறினால் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி பேரூராட்சி நிர்வாகம் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு பேரூராட்சிக்கு சொந்தமான இடம் மீட்கப்படும் என்ற அறிவிப்பு நோட்டிஸ் பேரூராட்சி செயல் அலுவலர் டார்த்தி முன்னிலையில் பேரூராட்சி அதிகாரிகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட 7 வீடுகளிலும் குடியிருப்பவர்களுக்கு அறிவிப்பு நோட்டீஸ்  வழங்கி கையெழுத்து பெற்றனர். மேலும் அறிவிப்பு வீட்டு கதவிலும் ஒட்டப்பட்டது. 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies