Type Here to Get Search Results !

முன்னாள் படைவீரர்களின் சிறார்களுக்கு வழங்கப்படும் பாரத பிரதம மந்திரியின் கல்விநிதியுதவி திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகைபெற விண்ணப்பிக்கலாம் மாவட்ட ஆட்சித்தலைவர்.

image credit : Google

முன்னாள் படைவீரர்களின் சிறார்களுக்கு வழங்கப்படும் பாரத பிரதம மந்திரியின் கல்விநிதியுதவி திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகைபெற விண்ணப்பிக்கலாம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தகவல் இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தெரிவித்துள்ளதாவது: 2023-2024-ஆம் கல்வி ஆண்டில் 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று 60% மேல் மதிப்பெண் பெற்ற முன்னாள் படைவீரர் / சிறார்களுக்கு பாரதப்பிரதமர் கல்விநிதியுதவி திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. 

இதனைத் தொடர்ந்து இவ்வாண்டிற்கு கீழ்க்கண்ட தொழிற்கல்வி பயிலும் மாணவ / மாணவியர்களுக்கு முதலாம் ஆண்டு பொறியியல், மருத்துவம், கால்நடை மருத்துவம், பி.டெக், பி.எஸ்.சி. நர்சிங், பி.எஸ்.சி. விவசாயம், கல்வியியல் (பி.எட்.,) படிப்பு மற்றும் எம்.பி.ஏ., எம்.சி.ஏ., சட்டம் மற்றும் பல்வேறு தொழிற்கல்விகள் பயின்றுவரும் சிறார்கள் பாரத பிரதம மந்திரியின் கல்வி உதவி திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆகின்றார்கள். இவ்வுதவித்தொகை தற்போது முன்னாள் படைவீரரின் மகளுக்கு வருடத்திற்கு ரூ.36,000/-மும், மகனுக்கு ரூ.30,000/- மும் அளிக்கப்பட்டு வருகிறது.


இத்திட்டத்தில் இந்த கல்வியாண்டின் தொடக்கத்தில் முதலாம் ஆண்டு விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு அடுத்த கல்வியாண்டில் விண்ணப்பிக்க முடியாது என்பதையும் தெரிவிக்கப்படுவதோடு இந்நதியுதவியினை பெறுவதற்கு மத்திய முப்படைவீரர் வாரிய அலுவலகமான (KSB) www.ksb.gov.in என்ற இணையதள முகவரியினை பார்வையிட்டு உரிய விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து தற்போது பயின்று வரும் கல்லூரியில் தகுதிச்சான்று (Bonafide Certificate) Bank Details மற்றும் முன்னாள் படைவீரரின் விண்ணப்பம் (Annexure 1,2,3) ஆகிய 3 படிவங்களை பூர்த்தி செய்து 30.11.2023க்குள் விண்ணப்பிக்குமாறு மத்திய முப்படைவீரர் வாரியத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


எனவே தகுதியான முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பித்து பயன்அடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது, என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தெரிவித்துள்ளார். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies