Type Here to Get Search Results !

காரிமங்கலம் அருகே இடைத்தரகர்களை வைத்து கர்ப்பிணி பெண்களுக்கு கருவில் உள்ள குழந்தை ஆணா, பெண்ணா என கண்டறிந்த பயிற்சி செவிலியர் உட்பட 5 பேர் கொண்ட கும்பல் கைது.


தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே செம்மன்குழிமேடு என்ற கிராமத்தில் சட்டவிரோதமாக இடைத்தரகர்  மூலம் கர்ப்பிணி பெண்களுக்கு  கருவில் உள்ள குழந்தை ஆணா, பெண்ணா என பரிசோதனையில் கண்டறிந்து, பெண்ணாக இருந்தால் கருக்கலைப்பு செய்தல் உள்ளிட்ட சட்ட விரோத செயல்கள் நடைப்பெற்று வருவதாக மாவட்ட நிர்வாகத்திற்க்கு இரகசிய தகவல் கிடைத்து,


 மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி    மருத்துவம் மற்றும் ஊரக நல பணிகள் இணை இயக்குநர் சாந்தி அவர்களின் தலைமையிலான மருத்துவர்கள் பாலசுப்ரமணியம், பாலாஜி அடங்கிய மருத்துவ குழுவினர்  செம்மன்குழிமேடு கிராமத்தில் உள்ள சுபாஷ் (28) என்பவரின் வீட்டில் தீடீர் சோதனை மேற்கொண்ட போது தர்மபுரி அழகாபுரியை சேர்ந்த சேர்ந்த கற்பகம் (வயது 38) என்ற பயிற்சி செவிலியர் சட்ட விரோதமாக  7கர்ப்பிணி பெண்களுக்கு ஆணா, பெண்ணா என்ற  பாலின பரிசோதனை மேற்கொண்ட போது கையும் களவுமாக பிடிபட்டார்.


மேலும் இதற்கு உடந்தையாக இருந்த அவரது கணவர் விஜயகுமார் (வயது.35) தர்மபுரி ஆசிரியர் காலணியை சேர்ந்த  இடைத்தரகர் சிலம்பரசன் (வயது 31)  நல்லம்பள்ளி சேர்ந்தஆட்டோ ஓட்டுநர் செல்வராஜ் (35) வீட்டின் உரிமையாளர் சுபாஷ் (வயது. 28) ஆகிய 5 நபர்களை பிடித்து காரிமங்கலம் போலீசில் ஒப்படைத்தனர்.


இதையடுத்து காரிமங்கலம் போலீசார் குற்றவாளிகளை கைது செய்து அவர்களிடமிருந்த ஸ்கேன் இயந்திரம், 4 செல்போன்கள், 2 சொகுசு கார் 1ஆட்டோ  உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்து குற்றவாளிகளை சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies