Type Here to Get Search Results !

மாவட்ட ஆட்சியர் செய்தி

பாப்பாரப்பட்டி வீட்டில் தனியாக இருந்த வயதான மூதாட்டிக்கு ஆப்பிள் பழத்தை கொடுத்து 40 பவுன் தங்க நகைகளை அள்ளிச்சென்ற பகீர் கொள்ளை சம்பவம்.


தருமபுரி அருகேவுள்ள  பாப்பாரப்பட்டியில் குடியிருந்து வரும் அரசுப்பள்ளி ஆசிரியரான சிவசேகர் என்பவருடைய வீட்டில்   இந்த கொள்ளை சம்பவம் சத்தமின்றி நடந்திருக்கிறது, ஆசிரியர் சிவசேகர் பாப்பாரப்பட்டி காவல்துறையில் கொடுத்த புகாரின் அடிப்படையில், விசாரணையில் இறங்கிய போலீசாருக்கு காத்திருந்தது மிகப்பெரிய அதிர்ச்சி.. காரணம் அங்கு கிடைத்த சிசிடிவி பதிவுகள் அரசு பள்ளிக்கூடம் ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

சிவசேகர், இவருடைய மனைவி ஜெயந்தியும் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். கடந்த 26 ஆம் தேதி கணவன்,மனைவி இருவரும் அவரவர் பணிக்கு சென்றிருந்தபோது, மதியம் வீட்டில் சிவசேகரின்  வயதான  தாயார் பெருமா, மற்றும் இவருடைய வயதான உறவினர் ஆகிய இருவர் இருந்துள்ளனர், கார் ஒன்றில் வந்த அடையாளம் தெரியாத பெண் ஒருவர் வீட்டினில் நுழைந்து தான் உங்கள் மருமகள் ஜெயந்தியினுடைய தோழி என தெரிவித்து, அவர்களிடம் நலம் விசாரித்து பேசத் தொடங்கியுள்ளார். 


அப்போது அங்கிருந்த முதியவர் தனக்கு தருமபுரியில் வேலை இருப்பதாக தெரிவித்து சென்றுள்ளார். இவரை கண்கானிக்க அந்த பெண்னும் பின்தொடர்ந்துள்ளார். அப்போது அந்த முதியவர் தருமபுரிக்கு பேருந்து மூலம் சென்ற பின்பு அந்த அடையாளம் தெரியாத பெண் தனியாக இருந்த மூதாட்டியிடம் ஆப்பிள் பழங்களுடன் வீட்டிற்குள் சென்று, முதியவர் சீட்டு ஒன்றை வீட்டிலேயே விட்டுச் சென்று விட்டதால் அதனை எடுத்து வர தன்னை அனுப்பி வைத்துள்ளார் என தெரிவிக்கவே, பின்பு எந்த சீட்டு என்று தனக்கு தெரியவில்லை என மூதாட்டி கூறவே, அவருடைய ரூமில் எந்த சீட்டு என்று நீயே பார்த்து எடுத்துக்கொள் என கூறியிருக்கிறார்.


வாங்கி வந்த ஆப்பிள் ஒன்றை மூதாட்டிக்கு சிறு சிறு துண்டுகளாக வெட்டி கொடுக்க அந்த மூதாட்டி சாப்பிடவே சில நிமிடங்களில் சுயநினைவை இழந்து அங்கேயே மயங்கி விழுந்திருக்கிறார், திட்டமிட்டபடி சரியான சமயத்தை பயன்படுத்திக் கொண்ட அந்த அடையாளம் தெரியாத பெண் பீரோவில் இருந்த 15 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் 40 பவுன் தங்க நகைகளை சத்தமே இல்லாமல் அள்ளிக்கொண்டு மின்னல் வேகத்தில் காரில் ஏறி மாயமாகாயிருக்கிறார் அந்தப் பெண்.


காரில் ஏறி மாயமான அந்த பெண் யாராக இருக்கும் என சந்தேகித்த போலீசார், அங்கிருந்த சிசிடிவி பதிவுகளை ஆராய்ந்த போது தான்,  காரில் வந்து சத்தமே இல்லாமல் பணம், மற்றும் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றது, சேலத்தை சேர்ந்த பிரபல கொள்ளைக்காரியான மைதிலியாகத்தான் இருக்கும் என வலுவான சந்நேகம் எழுந்துள்ளதை தொடர்ந்து, மைதிலியை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884