Type Here to Get Search Results !

இருளப்பட்டி ஸ்ரீ காணியம்மன் கோவில் உண்டியல் திறப்பு காணிக்கை ரூ 2.02 லட்சம் வசூல்.


இருளப்பட்டி ஸ்ரீ காணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் காணிக்கை மூலம் ரூ.2.02 லட்சம்  கிடைத்துள்ளதாக, கோயில் நிா்வாகம் அறிவித்துள்ளது. பாப்பிரெட்டிப்பட்டி அருகே இருளப்பட்டியில் ஸ்ரீ காணியம்மன் கோவில் அமைந்துள்ளது.

இக்கோயிலில் தரிசனம் செய்ய வரும் பக்தா்கள் தங்களது நோ்த்திக் கடனை செலுத்துவதற்காக, உண்டியல்களில் காணிக்கைகளை செலுத்துவா். இந்த உண்டியல்களின் காணிக்கை திரு விழாவிற்கு பிறகு ஊர் கவுண்டர்கள் முன்னிலையில் திறக்க பட்டது.தற்போது கடந்த மாதம் தேர் திருவிழா நடந்து முடிந்த து. இதனையடுத்து உண்டியல்   இந்து சமய அறநிலையத் துறை மூலம் செயல் அலுவலர் பிரபு தலைமையில், இருளப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் குமார், முன்னாள் சேர்மன் சின்னப்பகவுண்டர், ஊராட்சி மன்ற துணை தலைவர் ராஜேந்திரன், மற்றும் அனைத்து சமுதாய ஊர் கவுண்டர்கள் முன்னிலையில் திறக்க பட்டு காணிக்கை எண்ணிக்கை நடைபெற்றது.


இப்பணியில் கோவில் பணியாளா்கள், தன்னாா்வலா்கள் உள்ளிட்டோா் ஈடுபட்டனா். இதில் ரூ,2 இலட்சத்து, 2 ஆயிரத்து,709  ரொக்கம்,   காணிக்கையாக கிடைக்கப்பெற்றது,என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies