Type Here to Get Search Results !

நேரு யுவ கேந்திராவின் சார்பில் என் மண் எனது தேசம் திட்டத்தின் இரண்டாவது கட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி.


தருமபுரி மாவட்ட நேரு யுவ கேந்திராவின் சார்பில் என் மண் எனது தேசம் திட்டத்தின் இரண்டாவது கட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி தருமபுரி ஊராட்சி ஒன்றியம் கடத்தூர் கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர் ஐவண்ணன் தலைமையில் நடைபெற்றது.ஊராட்சி செயலாளர் சரவண குமார், சமூக ஆர்வலர் பார்த்திபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

நிகழ்ச்சியில் பாரதப் பிரதமரின் ஐந்து கொள்கைகள் குறித்த உறுதி மொழியினை அனைவரும் எடுத்துக் கொண்டனர்.கிராமத்தின் மைய பகுதியான முனியப்பன் கோவில் அருகில் மரக்கன்றுகளை ஊராட்சி மன்ற தலைவர் ஐவண்ணன் தொடங்கி வைத்தார். பின்னர் வீடு தோறும் என் மண் எனது தேசம் திட்டத்தின்படி மண் சேகரிக்கப்பட்டது.


நேரு யுவ கேந்திராவின் சார்பில் பல்நோக்கு பணியாளர் முனியப்பன் கலந்து கொண்டு நிகழ்ச்சி நடத்த ஒத்துழைப்பு நல்கினார். இந்நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற மகாத்மா காந்தி மாற்று திறனாளிகள் இளைஞர் நற்பணி மன்ற தலைவர் சுரேஷ் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies