Type Here to Get Search Results !

பஞ்சப்பள்ளியில் ஆட்டு கொட்டகையில் புகுந்த 15 அடி நீள பாம்பு பாலக்கோடு வனத்துறையினர் உயிருடன் பிடித்து காப்பு காட்டில் விட்டனர்.


தருமபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி அருகேயுள்ள  கிராமத்தில் வசித்து வரும் விவசாயி தேவேந்திரன் (வயது.43) இவர் ஆடு, மாடு, கோழி  உள்ளிட்ட கால்நடைகளை வளர்த்து வருகிறார். எதிர் பெறாத விதமாக 15 அடி நீள மலைப்பாம்பு ஒன்று  இவருடைய வீட்டின் அருகில் உள்ள ஆட்டு கொட்டகையில் நுழைந்தது, இதை கண்ட ஆடுகள் அலறின, அலறல் சத்தம் கேட்ட தேவேந்திரன் ஆட்டு கொட்டகை சென்று பார்த்த போது அங்கு மலைபாம்பு ஒன்று ஆட்டு கொட்டகை உள்ளே ஊர்ந்து சென்றதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து பாலக்கோடு வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக வந்த வனத் துறையினர் குழுவுடன்  மலைப்பாம்பை லாவகமாக உயிருடன் பிடித்து பிக்கனஅள்ளி காப்பு காட்டில் விட்டனர். மலைப்பாம்பு ஆட்டு கொட்டகைக்குள் புகுந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies