Type Here to Get Search Results !

பாலக்கோடு அருகே வெறி நாய் கடித்து குதறியதில் பெண்கள் உட்பட 15-க்கும் மேற்பட்டடோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி.


தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகேவுள்ள சோமனஅள்ளியில் தெருக்களில் சுற்றி திரியும் வெறிநாய்கள் அப்பகுதியை சேர்ந்த பெண்கள் உட்பட 15-க்கும் மேற்பட்டோரை கடித்து குதறியது, இது தவிர வீடுகளில் வளர்க்கபடும் ஆடு, மாடுகளையும், குறிப்பாக பால் கறக்க கூடிய கறவை மாடுகளை குறி வைத்து வெறி நாய்கள் அடுத்தடுத்து கடித்து வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.


சோமனஅள்ளியை சேர்ந்த  வெங்கடேசன் (38) பெரியண்ணன்(35)  சுப்ரமணியம் (53) இருசன் (45),காளியம்மாள் (45),மகேஷ் (32) உட்பட 15-க்கும் மேற்பட்டவரை திடிரென வெறி நாய்கள் கடித்து குதறியதில் காயமடைந்தவர்கள் பாலக்கோடு அரசு மருத்துவமனையி்ல் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


வெறி நாய்களின் அட்டகாசம் தொடர்வதால், வீடுகளை விட்டு வெளியே நடமாடுவதற்கே அச்சமாக இருக்கிறது, எந்த நேரத்தில் என்ன நடக்குமோ தெரியவில்லை பொதுமக்களையும், கால்நடைகளையும் கடித்து குதறி வரும் வெறி நாய்களை ஒழித்து கட்ட ஊராட்சி நிர்வாகமும், தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர் சோமன அள்ளி கிராம மக்கள்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies