Type Here to Get Search Results !

மாவட்ட "குடி"மக்களுக்கு ஓர் அதிர்ச்சி தகவல்.


எதிர்வரும் 15.08.2023 செவ்வாய்கிழமை "சுதந்திர தினம்" அன்று அரசு மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் மதுக்கூடங்கள் மூடிவைக்க உத்தரவிடப்படுகிறது. மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தகவல்.


இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தெரிவித்துள்ளதாவது, தருமபுரி மாவட்டத்தில் எதிர்வரும் 15.08.2023 செவ்வாய்கிழமை "சுதந்திர தினம்" அன்று தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின்கீழ் செயல்பாட்டில் உள்ள அரசு மதுபான சில்லறை விற்பனை கடைகள், அவற்றுடன் இணைந்த மதுக்கூடங்கள் மற்றும் FL-3, FL3A / FL4A உரிமம் பெற்ற தனியார் ஓட்டல்களின் மதுக்கூடங்கள் / முன்னாள் படைவீரர் மதுவிற்பனைக்கூடம் அனைத்தும் மதுபானங்கள் விற்பனை இன்றி மூடிவைக்க உத்தரவிடப்படுகிறது. 


மீறி எவரேனும் செயல்பட்டாலோ அல்லது கள்ளத்தனமாக மது விற்பனையில் ஈடுபட்டாலோ சட்டப்படியான கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தெரிவித்துள்ளார். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies