Type Here to Get Search Results !

டாஸ்மாக் திறப்பிற்கு எதிராக விடிய விடிய காத்திருந்த கிராம மக்கள்.


தருமபுரி மாவட்டம் ஏ.கொல்லஅள்ளி ஊராட்சி, மொடக்கேரி கிராமத்தில் ஜல்லி கிரசர் பகுதியில் சுமார் 250 குடியிருப்புகள் அமைந்துள்ளன. இப்பகுதியில் அரசு அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது மற்றும் சிவன் ஆலயம், வராகி அம்மன் ஆலயம், பெரியாண்டவர் ஆலயம், ஆஞ்சநேயர் ஆலயம் உள்ளிட்ட பல்வேறு வழிப்பாட்டு தலங்கள் இப்பகுதியின் மிக அருகாமையில் அமைந்துள்ளன. 


கொல்லஅள்ளி புதூர், ஐய்மன்னன் கொட்டாய், மொன்னையன் கொட்டாய், நரசிங்கபுரம், கோம்பை, மெய்யன்கொட்டாய், கடத்தூரான் கொட்டாய், ஜாலிக்கொட்டாய், ராஜாதோப்பு போன்ற கிராமங்களில் வாழும் பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவிகள் இக்கிராமத்தின் வழியாக தருமபுரி நகரப்பகுதிக்கு தினந்தோறும் வந்து செல்கின்றனர். 

தற்போது மொடக்கேரி கிராமம், ஜல்லி கிரசர் பகுதியில் புதியதாக அரசு மதுபான கடை துவங்குவதை அறிந்து இப்பகுதி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், டாஸ்மாக் வட்டாட்சியர், வருவாய்துறை அதிகாரிகள் உள்ளிட்ட அலுவலகங்களில் இந்த பகுதியில் மதுக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மனு அளித்தனர்.


இரவு நேரத்தில் மதுபான பாட்டில்களை கடையில் இறக்க உள்ளதாக தகவலறிந்த 100 க்கும் மேற்ப்பட்ட கிராம மக்கள் இரவு முழுவதும் காவல் இருந்தனர். இந்த பகுதியில் மதுக்கடை அமைக்க கூடாது என்பது கிராம மக்களின் கோரிக்கையாக உள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies