Type Here to Get Search Results !

மாணவ, மாணவிகளுக்கு அரசு இலவச மிதிவண்டி வழங்கும் திட்டத்தின் மூலம் மிதிவண்டிகளை வழங்கினார் தருமபுரி MLA.


தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியம், பாளையம்புதூர், ஏலகிரி, இலளிகம் அரசு மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் தருமபுரி ஊராட்சி ஒன்றியம், இலக்கியம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் கல்வி பயிலும் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு அரசு இலவச மிதிவண்டி வழங்கும் திட்டம் அந்தந்த பள்ளியின் வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிகளில் சிறப்பு அழைப்பாளராக தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன் கலந்துக்கொண்டு மாணவ,மாணவிகளுக்கு மிதிவண்டிகளை வழங்கி தொடங்கி வைத்தார். 

இந்நிகழ்ச்சிகளில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தடங்கம் சுப்ரமணி, தலைமை ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், பாமக மாநில அமைப்பு செயலாளர் ப. சண்முகம், மாநில செயற்குழு உறுப்பினர் பெ.பெரியசாமி, வன்னியர் சங்க மாவட்ட செயலாளர்இ.மா.பாலகிருஷ்ணன், மாவட்ட துணை செயலாளர்கள் த.காமராஜ், மனோகரன், நிர்வாகிகள் முத்துவேல், முனிவேல், மாது, அறிவு, அன்புகார்த்திக், ஜெயக்குமார், தமிழரசன், தங்கதுரை, வடிவேல், சிவக்குமார், ராஜா, பிரபாகரன், முனுசாமி, கன்னியப்பன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், ஆசிரியர்கள் பலர் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies