Type Here to Get Search Results !

பாளையம்புதூர் அரச துவக்கப்பள்ளிக்கு ரூபாய் 2 இலட்சம் மதிப்பீட்டில் ஸ்மார்ட் போர்டு வழங்கப்பட்டது.


தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியம், பாளையம்புதூர் அரச துவக்கப்பள்ளிக்கு தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்ட நிதியில் ரூபாய் 2 இலட்சம் மதிப்பீட்டில் ஸ்மார்ட் போர்டு வழங்கி ஸ்மார்ட் போர்டு வகுப்பறையை தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன் தொடங்கி வைத்தார். 

அதனை தொடர்ந்து பாளையம்புதூர் அரசு மேல்நிலை பள்ளியின் வளாகத்திற்கு ரூபாய் 5 இலட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் கல் பதிக்கும் பணியை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வுகளில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தடங்கம் சுப்ரமணி, தலைமை ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், பாமக மாநில அமைப்பு செயலாளர் ப. சண்முகம், மாநில செயற்குழு உறுப்பினர் பெ.பெரியசாமி, வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் இ.மா.பாலகிருஷ்ணன், மாவட்ட துணை செயலாளர்கள் த.காமராஜ், மனோகரன், நிர்வாகிகள் முத்துவேல், முனிவேல், மாது, அறிவு, அன்புகார்த்திக், ஜெயக்குமார், தமிழரசன், தங்கதுரை, வடிவேல், சிவக்குமார், ராஜா, பிரபாகரன், முனுசாமி, கன்னியப்பன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், ஆசிரியர்கள், பொதுமக்கள் பலர் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies