Type Here to Get Search Results !

பாலக்கோடு அருகே நிலத்தகராறில் பெண் தூக்குபோட்டு தற்கொலை


தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே ஜன்னி கொட்டாய் கிராமத்தை சேர்ந்த கட்டிட மேஸ்திரி பெரியசாமி இவரது மனைவி சாந்தி (வயது.39), இவர்களுக்கு  திருமணமாகி 19 வருடம் ஆகிறது. 17 வயதில் 1 மகனும் 16 வயதில் ஒரு மகளும் உள்ளனர். பெரியசாமிக்கு அவரது தம்பி, துரைக்கும் பொதுவாக 80 சென்ட் நிலம் உள்ளது.


கனவர் வேலைக்கு சென்றதும் பெரியசாமியின் அக்கா நிலம் சம்மந்தமாக சாந்தியிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். மேலும் அசிங்கமாக பேசியுள்ளார். இதனால் விரக்தியடைந்த சாந்தி இன்று அதிகாலை வீட்டில் அனைவரும் தூங்கி கொண்டிருந்த போது சேலையில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.


தகவலறிந்த பாலக்கோடு போலீசார் இறந்த சாந்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies