தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தண்டுகாரணஅள்ளி, எலுமிச்சினஅள்ளி, முதலிப்பட்டி ஆகிய கிராமங்களை சேர்ந்த திமுக, அமமுக உள்ளிட்ட மாற்று கட்சியினர் 25க்கும் மேற்பட்டோர், தண்டுகாரனஅள்ளியை சேர்ந்த சங்கர் தலைமையில் கெரகோடஅள்ளியில் உள்ள அதிமுக முன்னாள் உயர்கல்வி மற்றும் வேளாண் துறை அமைச்சர் மற்றும் பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினர் கே.பி.அன்பழகன் அவர்களை நேரில் சந்தித்து அவரது முன்னிலையில் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். கட்சியில் இனைந்த தொண்டர்களுக்கு கட்சி துண்டு அணிவித்து வரவேற்று வாழ்த்து தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் அதிமுகவின் பாலக்கோடு வடக்கு ஒன்றிய செயலாளர் வக்கில் செந்தில், காரிமங்கலம் மேற்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ், காரிமங்கலம் கிழக்கு ஒன்றிய செந்தில்குமார், மகேந்திரமங்கலம் கூட்டுறவு சங்க தலைவர், தகவல் தொழில்நுட்ப நிர்வாகி சாந்தகுமார், பாரதி உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.