Type Here to Get Search Results !

ஆசிரியர் தகுதி தேர்விற்க்கான தாள்-I மற்றும் தாள்-II-க்கு இலவச பயிற்சி வகுப்புகள்.


தருமபுரி மாவட்டத்தில் ஆசிரியர் தகுதி தேர்விற்க்கான தாள்-I மற்றும்  தாள்-II-க்கு இலவச பயிற்சி வகுப்புகள் வருகின்ற 21.08.2023 முதல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற உள்ளது, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கி.சாந்தி இஆப., அவர்கள் தகவல்.


இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கி.சாந்தி இஆப., அவர்கள் தெரிவித்துள்ளதாவது, தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தன்னார்வ பயிலும் வட்டம் செயல்பட்டு வருகிறது.   தமிழ்நாடு ஆசிரியர் பணியாளர் தேர்வு வாரியம் நடத்தும் ஆசிரியர் தகுதி தேர்விற்க்கான தாள்-I மற்றும்  தாள்-II-க்கு இலவச பயிற்சி வகுப்புகள் வருகின்ற 21.08.2023 முதல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் தருமபுரியில் நடைபெற உள்ளது.


இப்பயிற்சி வகுப்பில் சேர விருப்பமுள்ளவர்கள் இந்த https://tinyurl.com/4bk3z84c இணைப்பின் மூலம் தங்களை பதிவு செய்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறர்கள். மேலும் தொலைபேசி எண் 04342–296188  வாயிலாகவும் தொடர்பு கொள்ளலாம். தருமபுரி மாவட்டத்தில் உள்ள தகுதி வாய்ந்த நபர்கள் இலவச பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயன்பெறலாம். என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கி.சாந்தி இஆப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies