இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கி.சாந்தி இஆப., அவர்கள் தெரிவித்துள்ளதாவது. தருமபுரி மாவட்ட சமூகநல அலுவலகத்தில் குடும்ப வன்முறை தடுப்பு சட்டம் 2005 – ன் கீழ் இளநிலை உதவியாளர்/ தட்டச்சர் - 1 காலிப்பணியிடம் தொகுப்பூதிய ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கு தருமபுரி மாவட்டத்தை சார்ந்த பெண் விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இப்பணியிடத்திற்கு SSLC தேர்ச்சி (PSTM), தட்டச்சு தேர்ச்சி (Both Higher தமிழ் & ஆங்கிலம்) மற்றும் கணினி சார்ந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மாத சம்பளம் ரூ,12,000/-. வயது வரம்பு: குறைந்த பட்ச வயது 18 ஆகவும் அதிகப்பட்சமாக OBC - 34, MBC - 34, SC / ST- 37 – க்குள் இருக்க வேண்டும்.
பத்தாம் வகுப்பு தேர்ச்சி சான்றிதழ், தமிழ் வழி பயின்ற சான்று, தட்டச்சு தேர்ச்சி (Both Higher தமிழ் & ஆங்கிலம்) சான்றிதழ்கள், முன் அனுபவ சான்று, கணினி சார்ந்த அனுபவம் தொடர்பான சான்று, அடையாள அட்டை ஆகிய சான்றிதழ்கள் இணைத்து, இப்பணியிடத்திற்கு தகுதியான விண்ணப்பங்கள் 25.08.2023 பிற்பகல் 5.00 மணிக்குள் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கூடுதல் கட்டடத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட சமூகநல அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.