Type Here to Get Search Results !

தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டிகள் முறையே வருகின்ற 23.08.2023 மற்றும் 24.08.2023 ஆகிய நாட்களில் அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுகிறது.

மாதிரி படம்.

தமிழ்நாடு அரசு, தமிழ் வளர்ச்சித் துறையின்  2021-22ஆம் ஆண்டிற்கான  மானியக் கோரிக்கையில் அறிவிப்பிற்கிணங்க அண்ணல் அம்பேத்கர், முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் பிறந்தநாளையொட்டி, தருமபுரி மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சித் துறையின்  சார்பில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டிகள் முறையே  வருகின்ற 23.08.2023 மற்றும் 24.08.2023 ஆகிய நாட்களில் அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் முற்பகல் 09.30 மணிக்கு தொடங்கி நடைபெறுகிறது. 


பள்ளி, கல்லூரி  மாணவர்களுக்கான பேச்சுப் போட்டியில் பங்குபெற்று வெற்றி பெறும் மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசாக ரூ.5000/-,  இரண்டாம் பரிசாக ரூ.3000/-,  மூன்றாம் பரிசாக ரூ.2000/- மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பெறும். மேலும் அரசுப் பள்ளி மாணவர்கள் இருவருக்கு  சிறப்புப் பரிசாகத் தொகை ரூ.2000/- வீதம் வழங்கப்பெறவுள்ளது.   



அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள் பேச்சுப்போட்டிக்கான தலைப்புகள். 

பள்ளி

கல்லூரி

1. அம்பேத்கரின் இளமை பருவம்

2. பூனா உடன் படிக்கை

3. அயல் நாடுகளில் அம்பேத்கரின் உயர்கல்வி

4. பௌத்தத்தை நோக்கி

5. அம்பேத்கரும் காந்தியடிகளும்

6. வட்ட மேசை மாநாட்டில் அம்பேத்கரின்  

    பங்கு

7. இந்திய அரசியலமைப்புச் சட்டம்

8. சமூக நீதி என்றால் என்ன

9. அரசியலமைப்பின் தந்தை

10.சட்ட மேதை அம்பேத்கர்

 

1. கற்பி, ஒன்று சேர், புரட்சி செய்

2. பூனா உடன் படிக்கை

3. புத்தரும் அவரின் தர்மமும்

4. கூட்டாட்சி கோட்பாடும் பாகிஸ்தான்

    பிரிவினையும்

5. சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட

    அமைச்சர்

6. சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்

7. அம்பேத்கரின் சாதனைகள்

8. அம்பேத்கர் எழுதிய நூல்கள்

9. அரசியல் சாசனத்தின் தலைமை சிற்பி

10. அம்பேத்கரும் பௌத்தமும்


முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்த நாள் பேச்சுப்போட்டிக்கான தலைப்புகள்

பள்ளி

கல்லூரி

1. கலைத் தாயின் தவப்புதல்வன்

2. முத்தமிழறிஞர்

3. சங்கத் தமிழ்

4. செம்மொழி

5. பிறப்பொக்கும் எல்லாம் உயிருக்கும்

6. பொறுத்தது போதும் பொங்கி எழு

7. நல்லான் வகுத்ததா நீதி இந்த வல்லான்

    வகுத்ததே நீதி

8. தகடூரான் தந்த கனி

9. திராவிடம்

10.நெஞ்சுக்கு நீதி

1. என் உயிரினும் மேலான அன்பு உடன்

   பிறப்புகளே

2. அண்ணா தம்பிக்கு எழுதிய கடிதங்கள்

3. சமத்துவபுரம்

4. திராவிடச் சூரியனே

5. பூம்புகார்

6. நட்பு

7. குறளோவியம்

8. கலைஞரின் எழுதுகோல்

9. அரசியல் வித்தகர் கலைஞர்

10.சமூக நீதி காவலர் கலைஞர்

தருமபுரி மாவட்டத்தில் உள்ள கல்லூரி மாணவ, மாணவிகள் கல்லூரி கல்வி இணை இயக்குநர் வாயிலாக அனுப்பியுள்ள படிவத்தில் அந்தந்த கல்லூரி முதல்வரிடமும்,  பள்ளி மாணவ, மாணவிகள் முதன்மை கல்வி அலுவலர் வாயிலாக அனுப்பியுள்ள படிவத்தில் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியரிடமும் அனுமதி பெற்று பேச்சுப் போட்டியில் பங்கேற்கலாம். எனவே தருமபுரி மாவட்டத்தில் உள்ள கல்லூரி மற்றும் பள்ளிகளில்  பயிலும் மாணவ/மாணவிகள் இப்போட்டிகளில் பங்கேற்று பயன்பெறலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

 

 

வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், தருமபுரி மாவட்டம்.

  

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884