Type Here to Get Search Results !

இரண்டாம் நிலைக் காவலர், சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் போட்டித்தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள்.


தமிழ்நாடு சீருடை  பணியாளர் தேர்வு வாரியம்  நடத்தும் இரண்டாம் நிலைக் காவலர், சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் போட்டித்தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் தருமபுரி  மாவட்டத்தில் வருகின்ற 30.08.2023 முதல் நடைபெற உள்ளது மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தகவல் இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தெரிவித்துள்ளதாவது.


தமிழ்நாடு சீருடை  பணியாளர் தேர்வு வாரியம்  நடத்தும் இரண்டாம் நிலைக் காவலர், இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான நேரடித்தேர்வு- 2023 பதவிகளுக்கான அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.


காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 3359. கல்வி தகுதி பத்தாம் வகுப்பு தேர்ச்சிப்பெற்றிருக்க வேண்டும். இப்பணியிடங்களுக்கு 18.08.2023 முதல் 17.09.2023 வரை விண்ணப்பிக்கலாம். இந்த போட்டித் தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் மற்றும் மாதிரி தேர்வுகள் தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில்  30.08.2023 முதல் நடைபெற உள்ளது. இப்பயிற்சி வகுப்பில் சேர விருப்பமுள்ளவர்கள் இந்த https://t.ly/zm2VH இணைப்பின்  மூலம் தங்களை பதிவு செய்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறர்கள். 


மேலும் தொலைபேசி எண் 04342–296188  வாயிலாகவும் தொடர்பு கொள்ளலாம். தருமபுரி மாவட்டத்தில் உள்ள தகுதி வாய்ந்த நபர்கள் இலவச பயிற்சிவகுப்பில் சேர்ந்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies