தருமபுரி மாவட்டத்தில் உள்ள அரசினர் தொழிற் பயிற்சி நிலையம் தருமபுரி மற்றும் அரசினர் தொழிற் பயிற்சி நிலையம் அரூரில் இவ்வாண்டு ஆகஸ்ட் 2023-ம் ஆண்டு சேர்க்கைக்கு முதல் கட்ட சேர்க்கை நடைபெற்றதில் தொழிற் பிரிவுகளில் மீதமுள்ள காலியிடங்களை நிரப்பிட நேரடி சேர்க்கைக்கான கால அவகாசம் 31.07.2023 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு:
- 14 வயது முதல் 40 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள்
- பெண்களுக்கு குறைந்தபட்ச வயது 14 உச்ச வரம்பு இல்லை.
10ம் வகுப்பு தேர்ச்சி:
- 2021ல் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் 9ம் வகுப்பு மதிப்பெண் பட்டியலின்படி பதிவேற்றம் செய்யலாம். கீழ்க்காணும் தொழிற்பிரிவுகளில் ஆண், பெண் இருபாலரும் சேர்க்கையில் கலந்துகொள்ளலாம்.
தருமபுரி, அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் காலியாக உள்ள தொழிற்பிரிவுகள்:
10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள்: கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் அண்டு புரோகிராமிங் அசிஸ்டண்ட் (கோபா) (1வருடம்), கட்டடபட வரைவாளர் (2வருடம்), பொருத்துநர் (2வருடம்), கம்மியர் மோட்டார் வண்டி (2வருடம்), கம்மியர் டீசல் (1வருடம்) மற்றும் இயந்திர வேலையாள் (2வருடம்)
தொழில் 4.0 நவீன தொழிற்நுட்ப புதிய தொழிற்பிரிவுகள்:
இன்டஸ்ட்ரியல் ரோபோடிக்ஸ் & டிஜிட்டல் மேனுபேக்ட்சரிங் டெக்னீசியன் (1 வருடம்), பேசிக் டிசைனர் & விர்ச்சிவல் வெரிபையர் (2 வருடம்)
அரூர், அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் காலியாக உள்ள தொழிற்பிரிவுகள்:
10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் : பொருத்துநர் (2 வருடம்), ரெப்ரிஜிரேசன் ஏர் கண்டீசனிங் டெக்னீசியன் ( 2 வருடம்), மெக்கானிக் ஆட்டோ பாடி ரிப்பேர் ( 1வருடம்)
சேர்க்கைக்கு வரும்போது தங்கள் அசல் கல்விச்சான்றிதழ்கள், சேர்க்கை மற்றும் விண்ணப்ப கட்டணங்களுடன் நேரில் வருகைபுரியுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. Original 10th Mark sheet, Original T.C, Original Community, ஆதார் அட்டை, அலைபேசி எண்கள், மார்பளவு புகைப்படம்.-1, email ID மற்றும் விண்ணப்ப கட்டணம் ரூ.50/- & சேர்க்கை கட்டணம் ரூ.195/- (அ) ரூ.185/- பயிற்சி காலத்தின்போது பயிற்சியாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.750/- உதவித்தொகையாக வழங்கப்படும்.
இதை தவிர விலையில்லா பாடபுத்தகம், விலையில்லா வரைபட கருவிகள், விலையில்லா மடிகணினி, விலையில்லா சீருடை, விலையில்லா மிதிவண்டி, விலையில்லா பேருந்து பயண அட்டை, விலையில்லா மூடுகாலணி முதலிய சலுகைகள் வழங்கப்படும். ஆண் மற்றும் பெண் பயிற்சியாளர்களுக்கு விடுதி வசதி உண்டு.
மேலும் இந்நிலையத்தில் பயிலும் மாணவிகளுக்கு மூவலூர் இராமிர்தம் அம்மையார் கல்வி உதவித்தொகையாக ரூ.1000/- மாதந்தோறும் வழங்கப்படுகிறது. எனவே தகுதியுள்ள மாணவ, மாணவியர்கள் இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் மற்றும் ஏற்கனவே விண்ணப்பித்து தொழிற்பிரிவு கிடைக்கப்பெறாதவர்கள் இந்த வாய்ப்பினை தவற விடாமல் விண்ணப்பித்து பயனடையலாம். விண்ணப்பங்களை இலவசமாக பதிவேற்றம் செய்ய தருமபுரி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தை அணுகலாம். மேலும் விபரங்களுக்கு - 9445803042, 9361745995, 9894930508 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
.gif)

.jpg)