Type Here to Get Search Results !

பாலக்கோடு பஜாஜ் ஷோரூம் முன்பு சைக்கிள் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் டேங்கர் லாரி கிளினர் படுகாயம்.


தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு கமால்சாகிபு தெருவை சேர்ந்தவர் சனாவுல்லா (45) இவர் பாலக்கோடு பாப்பரப்பட்டி கூட்ரோடு அருகே உள்ள எச்.பி. பெட்ரோல் பங்கில் பெட்ரோல்  டேங்கர் லாரியில் கிளினராக வேலை செய்து வருகிறார்.

இவர் கடந்த 7ம் தேதி மாலை பெட்ரோல் பங்கில் டேங்கர் லாரியிலிருந்து  பெட்ரோல் இறக்கி விட்டு வீட்டிற்க்கு செல்வதற்காக சைக்கிளில் பாலக்கோடு நோக்கி சென்று கொண்டிருந்தார், பஜாஜ் ஷோரும் அருகே சென்று கொண்டிருந்த போது எதிரே தர்மபுரி நோக்கி வந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் இவர் மீது நேருக்கு நேர் மோதியதில் பலத்த காயமடைந்தார்.


உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் பாலக்கோடு அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக ஓசூர் தனியார் மருத்துவமனையில் சேர்க்ப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அவரது மனைவி முபினா  இன்று பாலக்கோடு போலீசில் கொடுத்த புகாரின் பேரில் பாலக்கோடு போலீசார் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies