Type Here to Get Search Results !

முதலமைச்சரின் காலை உணவு திட்ட விரிவாக்க நிகழ்வை துவக்கிவைத்தார் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மரு. DNV.S.செந்தில்குமார்.


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள், இந்தியாவிலேயே முதன்முறையாக முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தினை மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும் விரிவாக்கம் செய்யும் பணியை நாகப்பட்டினம் மாவட்டம், திருக்குவளையில் இன்று (25.08.2023) தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து, தருமபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி கி. சாந்தி இஆப., அவர்கள், தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மரு.டி.என்.வி.எஸ். செந்தில்குமார் மற்றும் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.பி.வெங்கடேஷ்வரன் ஆகியோர் தருமபுரி டவுன் நகராட்சி தொடக்கப் பள்ளியில் இத்திட்டத்தைத் தொடங்கி வைத்தனர்.


தருமபுரி மாவட்டத்தில் பாலக்கோடு வட்டாரத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் கடந்த 15.09.2022 அன்று முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் முதற்கட்டமாக தொடங்கப்பட்டது. பாலக்கோடு வட்டாரத்தில் 111 பள்ளிகளில் பயின்றுவரும் 1 ம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை உள்ள 6126 மாணவ, மாணவிகள் இத்திட்டத்தில் பயன்பெற்று வருகின்றனர்.


தமிழ்நாட்டில் தருமபுரி மாவட்டத்தில் பாலக்கோடு வட்டாரத்தில் சிறப்பு உணவாக ராகிபுட்டு செவ்வாய்கிழமை அன்று வழங்கப்படுகிறது. இது நமது மாவட்டத்திற்க்கு உண்டான தனி சிறப்பாகும். இத்திட்டத்தின் சிறப்பம்சமாக ஏழை எளிய மாணவர்களுக்கு தரமான மற்றும் சுவையான காலை சிற்றுண்டி கிடைக்கப்பட்டு அவர்கள் ஆரம்பபள்ளி பருவத்தை பட்டினியின்று படித்து உதவும் ஒரு சிறப்பு திட்டமாக செயல்பட்டு வருகிறது.


தற்போது தருமபுரியில் இரண்டாம் கட்டமாக அனைத்து வட்டாரங்கள், பேருராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் உள்ள 1013 பள்ளிகளில் காலை உணவு திட்டம் இன்று 25.08.2023 விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டத்தின் ஊராட்சிகளில் 951 பள்ளிகளில் பயின்று வரும் 46741 மாணவ, மாணவிகளும், பேரூராட்சிகளில் 49 பயின்று வரும் பள்ளிகளில் 3812 மாணவ, மாணவிகளும், நகராட்சியில் 13 பள்ளிகளில் பயின்று வரும் 974 மாணவ, மாணவிகளும் இத்திட்டத்தில் பயன்பெறுகின்றனர்.


தருமபுரி மாவடத்தில் முதலமைச்சரின் காலை உணவு திட்ட விரிவாக்க பணியானது இன்றைய தினம் தருமபுரி டவுன் நகராட்சி தொடக்கப் பள்ளியில் துவக்கிவைக்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் இப்பள்ளியில் பயின்றுவரும் 80 மாணவ, மாணவியர்கள் பயன்பெறுகின்றனர். இத்திட்டத்தின் மூலம் 2833 சுய உதவிகுழு உறுப்பினர்களுக்கு உரிய பயிற்சிகள் வழங்கப்பட்டு காலை உணவு திட்டத்தில் சமையலர்களாக பணியமர்த்தப்பட்டுள்ளனர்.


இந்நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திருமதி. தீபனாவிஷ்வேஸ்வரி இஆப., முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. தடங்கம்.பெ.சுப்பிரமணி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திரு.கு.குணசேகரன், தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் திருமதி.டி.கே.கீதாராணி, தருமபுரி நகராட்சி ஆணையாளர் திரு.புவனேஷ்வரன், மாவட்ட கல்வி அலுவலர் திருமதி. மான்விழி, தருமபுரி நகர்மன்ற துணைத்தலைவர் திருமதி. நித்யா அன்பழகன், வார்டு உறுப்பினர் திரு.நாகராஜ் உள்ளிட்ட தருமபுரி நகர்மன்ற பிரதிநிதிகள் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies