தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 15.08.2023 அன்று நடைபெற்ற சுதந்திர தினநாளின் போது தாய்நாட்டிற்காக தங்களுடைய இளம் வயதை நாட்டின் எல்லையில் ராணுவப்பணியில் கழித்து, பணிக்காலம் நிறைவு பெற்று திரும்பும் முன்னாள் இராணுவத்தினர் பயன்பெறும் வகையில் ரூ.7.00 கோடி மதிப்பீட்டில் 10 ஆயிரம் முன்னாள் படைவீரர்களுக்கு உரிய பயிற்சிகள் வழங்கி அவர்களது திறனை மேம்படுத்தவும், அவர்கள் மறு வேலைவாய்ப்பில் அமரும் வகையில் தக்க உதவிகள் புரிந்திட திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கிட தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே தருமபுரி மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படைவீரர்கள் திறன் மேம்பாட்டு பயிற்சியில் கலந்து கொள்ள ஏதுவாக தருமபுரி மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தில் தங்களது விருப்பத்தினை வழங்கிடுமாறு தெரிவித்து கொள்ளப்படுகிறது. மேலும் விபரங்களுக்கு 04342- 297844 என்கிற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது. என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தனது செய்தியறிக்கையில் தெரிவித்துள்ளார்.
.gif)

