Type Here to Get Search Results !

பி.அக்ரஹாரம் கரூர் மாரியம்மன் கோவிலின் சுற்றுப்புறத்தை தூய்மை பணி செய்த மருதம் நெல்லி ஜெயம் கலை அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள்.


தருமபுரி மாவட்டம் நல்லானூர் மருதம் நெல்லி ஜெயம் கலை அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் மூலம் பி.அக்ரஹாரம் அருகே உள்ள கரூர் மாரியம்மன் கோவிலின் சுற்றுப்புறத்தை தூய்மை பணி செய்தனர். கோவிலை சுற்றி உள்ள நெகிழிகள், பாட்டில்கள் மற்றும் காகிதங்களை அப்புறப்படுத்தி கோவில் வளாகத்தை தூய்மை செய்தனர். 


அங்கு வந்த பக்தர்களிடம் நெகிழிகளை தவிர்ப்போம் என்ற கருத்தை நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் வலியுறுத்தினர். இந்த தூய்மை பணிக்கு கல்லூரி தாளாளர் முனைவர் கோவிந்த் அவர்கள் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் முனைவர் பரஞ்ஜோதி, துறைத்தலைவர் தமிழரசு, நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் சதீஸ் குமார் ராஜா, பெருமாள் பாலுர ஆகியோர் ஒருங்கிணைத்தனர். 


நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் அலகு-1 மற்றும் அலகு-2 மாணவர்கள் தூய்மை பணி செய்தனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies