தருமபுரி மாவட்ட விளையாட்டரங்கில் மாவட்ட 77வது சுதந்திர தின விழாவில் ஆட்சியர் திருமதி. சாந்தி தேசிய கொடியை ஏற்றி வைத்து காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
77வது சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது, தமிழகத்தில் சென்னை கோட்டையில் முதல்வர் அவர்கள் தேசிய கொடியை ஏற்றினார், தர்மபுரி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் திருமதி. சாந்தி அவர்கள் மாவட்ட விளையாட்டு அரங்கில் தேசிய கொடியினை ஏற்றி வைத்து காவல்துறையினர் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். அதன் பின்னர் தேசப்பற்றை போற்றும் வகையில் சமாதான புறா மற்றும் மூவர்ண நிறத்தில் பலூன்களும் பறக்க விடப்பட்டது.
பின்னர் காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டு பாராட்டினார், மேலும் சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு பொன்னாடை போர்த்தி அவர்களை வாழ்த்தி பெருமைப்படுத்தினர், அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் 29 பயனாளிகளுக்கு ரூ.94 லட்சத்து 68, ஆயிரத்து 306 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். பின்னர் நடைபெற்ற பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளை கண்டுகளித்தார் மாவட்ட ஆட்சியர்.