இக்கூட்டத்த்திற்கு ஊராட்சிக்குட்பட்ட 9 வார்டுகளில் இருந்து சுமார் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். நீண்ட நேரம் கடந்தும் ஊராட்சி மன்ற தலைவி ஜோதிமணி பால்ராஜ் கூட்டத்திற்க்கு வரவில்லை. மேலும் 2 அதிகாரிகளை தவிர மற்ற துறை சார்ந்த அதிகாரிகள், வார்டு உறுப்பிணர்கள் ஒரு சிலரை தவிர மற்றவர்கள் யாரும் வராததால், ஊராட்சி மன்ற தலைவி மற்றும் அதிகாரிகள் வர வேண்டும் என பொதுமக்கள் கூச்சலிட்டனர்.
இதனிடையே பஞ்சாயத்து செயலர் ஏற்கனவே எழுதி வரப்பட்ட தீர்மானத்தில் பொதுமக்களிடம் வற்புறுத்தி கையெழுத்து பெற முயற்சி செய்ததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் ஒட்டு மொத்தமாக கூட்டத்தை புறக்கணித்து சென்றனர். அப்போது பொதுமக்கள் கூறுகையில் குடிநீர், தெருவிளக்கு, தெரு சாலை உள்ளிட்ட எந்த ஒரு அடிப்படை தேவைகளையும் செய்து தருவதில்லை, பலமுறை புகார் தெரிவித்தும் அதிகாரிகளும் கோரிக்கைகளை கண்டு கொள்வதில்லை, கடந்த முறை கிராமசபை கூட்டத்திற்க்கும் தலைவர் வரவில்லை, தலைவர் அதிகாரிகள் இல்லாமல் ஊராட்சி செயலாளரை வைத்து தீர்மானங்களை நிறைவேற்றி வரும் ஊராட்சி தலைவரை கண்டித்து கூட்டத்தை புறக்கணிப்பதாக தெரிவித்தனர்.