பென்னாகரம் காரல் மார்க்ஸ் திருமண மண்டபத்தில் நடைபெற்ற தேமுதிக நிர்வாகி இல்ல திருமண விழாவில் தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தாசம்பட்டி சாலையில் உள்ள காரல் மார்க்ஸ் திருமண மண்டபத்தில் தேமுதிக பெண்ணாகரம் பேரூர் கழக செயலாளர் செந்தில்குமார் மகள் திருமண நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த திருமண நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவன தலைவர் விஜயகாந்த் அவர்களின் மகன் விஜய பிரபாகரன் கலந்து கொண்டு மணமக்களை நேரில் வாழ்த்தினார்.
இந்த நிகழ்ச்சியின் பொழுது தேமுதிக மாநில கழக அவை தலைவர் மருத்துவர் இளங்கோவன்,மேற்கு மாவட்ட செயலாளர் விஜய சங்கர்,கிழக்கு மாவட்ட செயலாளர் குமார், பேரூர் கழக முன்னாள் செயலாளரும் பேரூராட்சி மன்ற உறுப்பினருமான பி கே குமார் உள்ளிட்ட தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் மாவட்ட ஒன்றிய பேரூர் கழக நிர்வாகிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
.gif)

